ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டேடியத்தில் சென்று கிரிக்கெட் போட்டிகளை காண்பது வழக்கமானது. ஆனால் சில நேரங்களில் ஸ்டேடியங்களில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.

இதேபோன்று கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியை காண மைதானத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில ரசிகர்கள் சீட் ஒதுக்கீடு தொடர்பான கருத்து வேறுபாட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மிகச் சிறிய கருத்து வேறுபாடு பெரிய சண்டையாக மாறியது. இதுகுறித்து அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக ரசிகர்களுக்கிடேயான வாக்குவாதத்தை சரி செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீடியோ 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வருகிறது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் “டெல்லி ரசிகர்கள் தானே எப்பவுமே சண்டைதான்” என விமர்சித்து வருகின்றனர்.