புதுச்சேரிக்கு கேரளா தமிழ்நாடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாவுக்காக வருகிறார்கள். தொடரும் விடுமுறை போன்ற தினங்களில் சென்னையிலிருந்து பெரும்பாலான பயணிகள் பைபாஸ் மற்றும் ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மறித்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதாக எழுந்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது சுற்றுலா பயணிகளின் ஆவணங்கள் சரியான முறையில் இருந்தாலும் காவல்துறையினர் அபதாரம் வழங்குவதாக குற்றம் சாட்டி வருகின்றதால் இனிமேல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் அபராதம் விதிக்க கூடாது என அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து அவதாரம் விதிப்பது வருமானத்தை பாதிக்கும் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.