
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராட் வீலர் நாய் ஒரு கோப்ரா பாம்பை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில், வீட்டின் தோட்டத்தில் வைத்து ராட் வீலர் நாய் கோப்ராவை வளைத்து கொன்று, அதன் தலையும் வாலையும் துண்டித்து விடும் காட்சி பதிவாகியுள்ளது. நாயின் உரிமையாளர் அதை அடக்க முயன்றாலும், நாய் தொடர்ந்து தாக்கி பாம்பை கொன்றுவிடுகிறது. இதைத்தொடர்ந்து “Rottweiler vs Cobra” எனக் குறிப்பு செய்யப்பட்ட இந்த வீடியோ, 57 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளையும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சில சமூக வலைதள பயனர்கள், “கோப்ரா பாம்புகள் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை, அவை வளைந்து மிரட்டிய பிறகே கடிக்கும்” என்றும், கோப்ராக்கள் விஷப்பாம்புகளான வைப்பர்களை உணவாக உட்கொள்கின்றன என்பதால், இயற்கை சமத்துவத்தை காப்பாற்ற அவற்றை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும் இது குறித்து நாய்கள் மற்றும் பாம்புகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அவசியம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க