
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் உள்ள ஃபீலிங்ஸ் பாடலும் வைரலானது. இந்நிலையில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் துறையின் தலைவரான பார்வதி ரேணு என்பவர் தனது கல்லூரி விழாவில் தனது மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அவர் பச்சை நிற புடவையில், புஷ்பா 2 பீலிங்ஸ் பாடலுக்கு முதலில் தன் மாணவர்கள் ஆடும் காட்சியை பார்த்தார். அதன் பின் தனது பையை நாற்காலியில் வைத்துவிட்டு அவரும் வந்து இணைந்து கொண்டார். அவரது நடனத்தைக் கண்டு மாணவிகள் பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பயனர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram