நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள st.சேவியர்ஸ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40) தனியார் விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவில் மது போதையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசியும் மாணவியை மது அருந்த அழைத்தும் உள்ளனர்

.இதைக் கேட்டு பதற்றம் அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் உள்ள காவல்துறையில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ஜபஸ்டினை கைது செய்தனர். ஆனால், பால்ராஜ் தப்பி ஓடியுள்ளார்.அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இரு பேராசிரியர்களை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது