
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாவனா(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம் ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட அவர், சிறிது நேரத்தில் விடுதிக்கு சென்று விட்டு வருகிறேன் என்று தனது தோழிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் அவரை விடுதியில் சென்று பார்த்தனர். அப்போது பாவனா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அவரது தோழிகள் கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பாவனாவின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் பாவனா எழுதிய கடிதம் ஒன்று அந்த அறையில் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய காவல் துறையினர் அந்த கடிதத்தில், என்னுடைய இறப்புக்கு என் காதலன் தான் காரணம். அவன் என்னை ஏமாற்றி விட்டான். என்னால் இந்த காதல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். அம்மா, அப்பா ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதலன் யார் என்பதை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.