இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை ஹோலி. இந்துக்களின் பண்டிகையான இந்த விழாவில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணக் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசி மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஹோலி பண்டிகை ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் உத்தர பிரதேச மாநிலம், விருந்தவனத்தில் நேற்று ஹோலி கொண்டாட்டங்கள் வண்ணப் பொடிகளுடன் ஆரம்பித்தது. அதில் அப்பகுதியில் வாழும் விதவைகள் வண்ண பொடிகளை தூவி ஹோலியை மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.