
நாட்டின் 76 ஆவது சுதந்திர விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சுகாந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
அதன் பின்னர் அவர் உரையாற்றும்போது, அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த காவல் ஆணையரான தாமஸ் ஜோஸ் என்பவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சக காவலர்கள் மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். இதையடுத்து ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார்.