மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி அளித்த புகாரில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காதம்பரி மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார், அதனை தொடர்ந்து, அதனை வாபஸ் பெற வைக்க போலீசார் துன்புறுத்தியதாக நடிகை குற்றம் சாட்டினார். நடிகையை பொய் வழக்கில் கைது செய்ததன் பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், காதம்பரி மீண்டும் ஆந்திரா போலீசில் அதிகாரிகள் மீது புகார் அளித்தார். அவருடைய புகாரின் அடிப்படையில், அப்போது உளவுத்துறை டி.ஜி.பி. சீதாராம ஆஞ்சநேயலு, முன்னாள் விஜயவாடா கமிஷனர் ராணா டாடா மற்றும் துணை கமிஷனர் விஷால் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்புடையவர்களாக தெரியவந்தது.இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்துள்ளனர்.