
நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த பறை உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இதுகுறித்து துறை ரீதியாகா நடத்துனரிடம் விசாரணை நடந்து வருவதாக நெல்லை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அரசு பேருந்து நடத்துனர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.