
ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரத்தில் சனாதனத்தை எதிர்த்த உதயநிதியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதாவது திருப்பதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பவன் கல்யாண் பேசியதாவது, நிறைய தமிழ் மக்கள் இருக்கும் இந்த இடத்தில் வைத்து கூறுகிறேன். சனாதனம் என்பது வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசியுள்ளார்.
அவர்களுக்கு சொல்கிறேன் உங்களால் சனாதனத்தை அளிக்க முடியாது, அதை அழிக்க நினைத்தால், நீங்கள் தான் அழிந்து போவீர்கள். உங்களைப்போல் பலரும் இதுபோன்று பேசி வந்து சென்று விட்டனர், ஆனால் சானதனம் அப்படியேதான் இருக்கிறது என்று கூறினார். இதில் பவன் கல்யாண், உதயநிதி ஸ்டாலின் பெயரை உச்சரிக்காமல் மறைமுகமாக அவரை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது “Lets wait and see” என்று பதிலளித்தார். பின்னர் ஆதிமுக-க்கு வாழ்த்து கூறினார். இதைத்தொடர்ந்து பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் எம்.ஜி.ஆர்-ஐ புகழ்ந்து பதிவு பெற்றுள்ளார். அந்த பதிவில் எம்ஜிஆர் புகைப்படத்தை பதிவு செய்து அவர் கூறியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீதான எனது அன்பும் அபிமானமும் இப்போதும் அப்படியே உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.