
பீகார் மாநிலத்தில் கன்னையாகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் கன்னையாகுமார் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பங்கான் கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவிலுக்கு அவர் சென்றார். அந்த கோவிலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு வேறோரு கோவிலுக்கு யாத்திரைக்காக கிளம்பி சென்றார்.
அதன் பிறகு அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலை தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கியான் ரஞ்சன் குப்தா ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியினர் மட்டும்தான் பக்தி உள்ளவர்களா..?இதனை கண்டிப்பாக நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் முதலில் இந்த வீடியோவில் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.