
காங்கிரஸ் கட்சியின் நிதியே இல்லாம, முடக்கப்பட்டிருக்கு மேலும் பைன் போடுறாங்க என காங்கிரஸ் சொல்லுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
அந்த நிதியை வச்சிட்டு தான் தமிழ்நாட்டை ஓட்டறாங்களா? நான் உங்களுக்கு சொல்றேன்… நம்ம ஒவ்வொருத்தருக்கும் டேக்ஸ்ல சரியான ரிட்டன் பைல் பண்ணிட்டோம்னா ப்ராப்ளம் இல்ல. டக்ஸ்ல எல்லாம் ஏதோ முன்னுக்குபின் முரணா சொல்லி இருந்தா அவங்க கேக்குறாங்க…. ஏங்க இப்படி இருக்குன்னு சொல்றீங்களா ? இது என்ன வரி குறையா இருக்குதுன்னு…
நிறையா இருக்குது கேள்வி கேட்கிறாங்க…. அதுக்கு தகுந்த சமயத்துல உடனடியா பதில் கொடுத்துட்டீங்கன்னா…. திருப்பி உங்ககிட்ட வருவதற்கு இல்ல…. இல்ல ஒருவேளை நீங்க கொடுத்த பதில் சரியா இல்லனா திருப்பி அப்பிலுக்கு வராங்க… நீங்க வாங்க, எங்களுக்கு முறையா விளக்கம் கொடுங்கன்னு…. அந்த ஒவ்வொரு முறையிலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய விவரத்தை ஒண்ணுமே சரியா சொல்லல.
அரசியல் கட்சிகளுக்கு வரி இல்லை. ஆனால் அந்த வரி இல்லை என்பதை கேட்டகிரி எப்போ நீங்க ஒவ்வொரு வருஷமும் எனக்கு வரி ஒன்னும் இல்லைங்க, நான் அரசியல் கட்சி என பேப்பரை பைல் பண்ணனும். அந்த பைல் கூட பண்ணாத நிலைமையில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி, கேள்வி கேட்டா தப்புன்னா… எப்படிங்க ?
சாமானிய மக்கள் நம்ம எல்லாரும் தான் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் கேக்குது. அதே மாதிரி தான் அவங்களையும் கேட்டாங்க…. அதுக்கு பிறகு சரி கேட்டதோட விட்டோமா, நீங்க கொடுத்த பதிலும் சரியா இல்ல, திருப்பி நாங்க கேக்குறோம்… அதுக்கு பிறகு என்ன சொல்றீங்க ? வாங்க கோர்ட்டுக்குனு சொல்லுறீங்க… சரி கோட்டுக்கு வந்தோம்.
இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்ட்டை ஒவ்வொரு கோர்ட்டுளையும் காங்கிரஸ் கட்சி கூட்டிட்டு போச்சு. ஒவ்வொரு கோர்ட்ளையும் விவரம் கொடுக்கின்றோம்… ஜட்ஜ் சொல்லுறாரு…. இல்ல IT டிபார்ட்மென்ட் சொல்லுறது கரெக்ட் தான்… நீங்க கட்டி தான் ஆகணும்னு சொல்றாங்க….
ஏங்க ஒவ்வொரு கோட்டுமா அப்படி சொல்லும்… சுப்ரீம் கோர்ட் வரைக்கும் நீங்க போய் இருக்கீங்க… ஒவ்வொரு கோட்டும் சொல்லுது…. நீங்க சமயத்துல பேப்பர் சப்ளை பண்ணல. கேள்விக்கு பதில் சொல்ல… உங்ககிட்ட இருக்கிற பணத்தை பத்தி விவரம் கொடுக்கல. இத்தனை பணத்தை காட்டாமல் வைத்திருந்தீங்க, எல்லாம் சொல்றாங்க…. சோ அவங்களுக்கு ஒரு நியாயம், நம்ம எல்லாருக்கும் ஒரு நியாயமா ? என கேள்வி எழுப்பினார்.