
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதன் காரணமாக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதல் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழக அரசு சார்பில் 1000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பலர் ஆம்னி பேருந்துகளில் செல்கிறார்கள்.
இந்நிலையில் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆம்னி பேருந்து டிக்கெட்டின் விலை தற்போது 1500 ரூபாயாக உயர்ந்துள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது என பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் ஆம்னி பேருந்துகளில் தற்போது விடுமுறையை முன்னிட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.