
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் முஜமின் என்பவர் வாகன தணிக்கையின்போது சிக்கினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதோடு அவரிடம் இருந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.