தெலுங்கானாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு, ஒரு நாள் முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா தடுப்பணை கட்டப்பட்டது. இதில் அவர் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜலிங்கமூர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் அவரது பைக்கை வழிமறித்துள்ளனர். அதன் பின் அவர்கள் இருவரும், அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.