தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை 10:15 மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என ட்வீட் செய்துள்ளார். அதோடு DMK files என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய சிறு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியல் மற்றும் தான் அணிந்திருக்கும் ரபேல் வாட்சின் பில் போன்றவற்றை வெளியிடுவதாக அறிவித்தார்.

அண்ணாமலை தன் கையில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்சை அணிந்திருப்பதாக கூறியதால் அந்த கைக்கடிகாரத்தின் பில்லை வெளியில் காண்பிக்குமாறு திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் அண்ணாமலை தான் கையில் கட்டி இருக்கும் ரபேல் வாட்சின் பில் மற்றும் திமுகவின் ஊழல் பட்டியல் போன்றவற்றை வெளியிடுவதாக கூறினார். தற்போது திமுகவில் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் ரபேல் வாட்ச் பில் பற்றி எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும் இதனால் ரபேல் வாட்ச் பில்லை எப்போது வெளியிடுவீர்கள் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.