
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆகி 1200 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது 3 விருதுகள் கிடைத்தது. அதன் பிறகு படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. சமீபத்தில் சிறந்த பாடல்களுக்கான ஆஸ்கர் விருதுகளின் இறுதி பட்டியலில் நாட்டு கூத்து பாடலும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது நாட்டுக்குத்து பாடலை நேரடியாக பாட இருக்கின்றனர். அதன்படி தெலுங்கில் நாட்டுகூத்து பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா இருவரும் பாடலை பாட இருக்கிறார்கள். இந்த தகவலை ஆஸ்கர் அகாடமி அதிகாரபூர்வமாக தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் வருகிற மார்ச் 12-ம் தேதி 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Rahul Sipligunj and Kaala Bhairava. “Naatu Naatu." LIVE at the 95th Oscars.
Tune into ABC to watch the Oscars LIVE on Sunday, March 12th at 8e/5p! #Oscars95 pic.twitter.com/8FC7gJQbJs
— The Academy (@TheAcademy) February 28, 2023