உலகில் 2,500க்கும் மேற்பட்ட கொசு வகைகள் இருந்தாலும், கொசுக்கள் இல்லாத ஒரே நாடு எது? என்ற கேள்விக்கு பதில் ஐஸ்லாந்து தான். ஐரோப்பாவின் வடக்கில் அமைந்துள்ள இந்த அழகான தீவு நாட்டில் கொசுக்களை காண முடியாது. இது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

விஞ்ஞானிகள் இதற்கு பல காரணங்களை கூறுகின்றனர். ஐஸ்லாந்தின் குளிர்ந்த காலநிலை, மண் மற்றும் நீரின் இரசாயன கலவை ஆகியவை கொசுக்கள் வாழ ஏற்ற சூழலை அளிப்பதில்லை என்பது ஒரு கருத்து. மேலும், ஐஸ்லாந்தின் புவியியல் அமைப்பும் இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், கொசுக்கள் இல்லாததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், ஐஸ்லாந்தில் கொசுக்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஐஸ்லாந்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கொசுக்களின் எச்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது, ஒரு காலத்தில் ஐஸ்லாந்திலும் கொசுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதை நிரூபிக்கிறது.

கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை பெற்ற ஐஸ்லாந்து, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கிறது.