
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் ஹேமா கமிட்டி தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த ஹேமா கமிட்டியா இருக்கு சிறப்பானது. இதை நான் முழுமையாக வரவேற்கிறேன். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு பெண்கள் மீதான பாலில் தொல்லைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினார்.
மேலும் நான் மற்றவர்கள் போல் கிடையாது. குற்றச்சாட்டு தெரிவித்தால் அப்படியா என்று சொல்லிவிட்டு கிளம்பாமல் தைரியமாக கருத்து கூறுவேன் என்று கூறினார். பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பிரச்சனை இருக்கிறது. அதை பொதுவெளியில் சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லை.
சிலருக்கு கடந்து போவதால் புகார் வெளிவரவில்லை. பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு தடுக்க கடும் நடவடிக்கை தேவை, என்னிடம் வந்தால் அடுத்த நிமிடமே ஆக்சன் எடுப்பேன்.