அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

சென்னை T-நகர் பகுதியில் இருக்கக்கூடிய 64 வயதான கிரிஜா என்பவரின் வீட்டை  2017 ஆம் ஆண்டு முதல் திமுக வட்ட செயலாளர் ராமலிங்கம் என்பவர் வாடகை தராமல் வசித்து வந்ததாக குற்றசாட்டு இருந்தது. இது  தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி,  உடனடியாக வீட்டை காலி செய்து வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும்,  அதற்கான உத்தரவாதத்தை காவல்துறை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

காவல்துறை எடுத்த நடவடிக்கை அடிப்படையில் வீட்டை ராமலிங்கம் காலி செய்து விட்டதாகவும்,  வீடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகும் காவல்  காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் கிரிஜா என்ற மூதாட்டி தரப்பில் வாடகை இன்னும் கொடுக்கவில்லை என்று தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து மூத்த  குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி வாடகை வசூலித்து கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மீண்டும் 11 ஆம் தேதி வைத்திருக்கிறார்.

அதே சமயம் அரசியல்வாதிகளுக்கு பல அறிவுறுத்தல்களை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் வழங்கி இருக்கிறார். மக்கள் நலனுக்காக தான் அரசு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். சுயநல பிரச்சனைக்காக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை பொதுமக்களை மிரட்டுவது மிரட்டப்படுவதற்கும்,  பிரச்சனையை ஈடுபடுவதற்கும் பயன்படுத்தினால் அதை இந்த நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும்,  ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கடுமையாக எச்சரித்து இருக்கிறார். அதேபோல அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என  அறிவுறுத்தி இருக்கிறார்.