திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.