திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நல்லையன் என்பவர் கடந்த 2008-ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்த வகையில் சம்பளமாக 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வர வேண்டி இருந்தது. அதனை பெற நல்லையன் லால்குடி சார்நிலை கருவூலத்திற்கு சென்றார்.

அங்கு கணக்காளராக வேலை பார்த்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கியா குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.