கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை வீட்டில் தங்க வைத்தார்.

அப்போது ஜான் மனைவியின் தங்கையிடம் நெருக்கமாக பழகி அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜான் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை புதைத்து விட்டார். இந்த வழக்கினை விசாரித்த குழித்துறை மகிளா விரைவு நீதிமன்றம் ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.