தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தேனி மாவட்டம் நீதிமன்றம் ராஜாவுக்கு இருபது ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.