
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி பகுதியில் ராஜ்பூர், நவீன் சபிஜி சந்தை ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் மாடுகள் அதிகமாக நடமாடி வருவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் சம்பவ நாளன்று மதியம் 12 மணிக்கு அந்த சந்தையில் சிறிய அளவில் காய்கறி கடை ஒன்றில் முதியவர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சேர்க்கைக்காக ஒரு காளை மாடு ஒன்று மற்றொரு மாடை சீண்டியது.
இதனால் மிரண்டு போன மாடு பதறி ஓடியது அதன் பின்னால் காளை மாடும் ஓடி வந்தது. இதில் காய்கறி கடையில் கீழே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த முதியவரின் மீது இரண்டு மாடுகளும் சீறிப்பாய்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தால் முதியவர் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
लखीमपुर खीरी, 2 सांडों की लड़ाई के बीच में पड़े बुजुर्ग किसान को सांड ने उठाकर पटका, किसान की मौके पर हुई मौत, सीसीटीवी में कैद घटना, राजापुर स्थित नवीन सब्जी मंडी की घटना । pic.twitter.com/3zDo4WLnqk
— Dharmendra Rajpoot (@dharmendra_lmp) March 6, 2025