உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோச் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி  கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மாட்டு தொழுவங்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மாநில அரசு, மாநிலம் முழுவதும் மாட்டுத் தொழுவங்களை அமைத்து வருகிறது. அவர்களுக்கு துர்நாற்றம் பிடித்திருக்கிறது அதே சமயம் நாங்கள் வாசனை திரவிய பூங்காக்களை அமைக்கிறோம் என கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்து நகராட்சி மாட்டுத் தொழுவ திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் பேசியுள்ளார்.

இந்நிகழ்வில் அவர் கூறியதாவது, உத்திர பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெறும் வாக்குகளுக்காக வாசனை திரவியத்தை விரும்புவதாகவும், தொழுவங்களை துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் கூறுகிறார். இது அவர் தனது சமூகத்துடன் உள்ள தொடர்பை இழந்துவிட்டதாக அர்த்தம். மாட்டுத் தொழுவம் துர்நாற்றம் வீசுவதாக கூறுபவர் எவரும் பாரத நாட்டில் இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் பதிலளித்தார்.