
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலை 8 மணி அளவில் கோட் வாலியில் உள்ள எல்.ஆர்.பி பகுதியில் உள்ள கடையில் வழக்கம்போல் ஜெகதீஷ் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென 4 பேர் ஜெகதீஷ் மீது கட்டையால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் பின் ஒருவராக நீளமான கட்டையால் ஜெகதீஷை சரமாரியாக தாக்கினர். அந்த கும்பலில் ஒருவர் கடையின் கவுண்டர் மீது ஏறி நின்று ஜெகதீஷை கொடூரமான முறையில் தாக்குகிறார்.
ये हमला तो नहीं हो सकता, शायद कोई फिल्म शूट हो रही होगी !!
सीन है : होटल मालिक जगदीश कुमार की राजेश वर्मा, अनुज वर्मा, रोहित ने डंडों से कुटाई की।
📍लखीमपुर खीरी, उत्तर प्रदेश pic.twitter.com/4JrKRpu69b
— Sachin Gupta (@SachinGuptaUP) April 15, 2025
அதன் பின்னர் 4வது ஒரு நபர் பாதிக்கப்பட்ட ஜெகதீஷை மிரட்டுகிறார். இச்சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து ஜெகதீஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் நில தகராறு காரணமாக நீண்ட காலமாக ஜெகதீஷை தாக்குவதற்காக குறி வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் ரோகித், ராஜேஸ்,வர்மா மற்றும் அனுச்வர்மா என்பவர்கள் என தெரியவந்தது. உத்திரபிரதேசத்தில் கடை உரிமையாளரை 4 நபர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.