உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வருகிற மார்ச் மாதம் இவரது திருமணம் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து தகவல் அறிந்த இவரது முன்னாள் காதலன் இவர் பள்ளிக்குச் செல்லும்போது வழிமறித்துள்ளார். அதன் பின் தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காதலனும் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் உடல் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.