
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஐந்தாம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறது . இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது இன்று காலை 10.15 மணியளவில் ஆன்லைன் மூலமாக தொடங்குகிறது.
எனவே ரசிகர்கள் www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் ஆனது 1700, 3500, 4000, 7500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.