
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங்க தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கி பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசம் ஆக்கியது.
இந்த நிலையில் தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கூறுகையில்,” கடைசி நான்கு போட்டிகளை சென்னை அணியின் பீல்டிங் உச்சத்தில் உள்ள கேட்சுகளை கோட்டை விட்ட பின்பு அதை பேட்ஸ் மேன்கள் கூடுதலாக 30 ரன்கள் விளாசுகிறார்கள் . அதேபோல சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். நாங்கள் சீரான இடைவெளி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் பஞ்சாப் அணி என்றால் குவிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்.
ஒருவேளை 15 ரன்கள் குறைத்து இருந்தால் சென்னை அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனாலும் நாங்கள் தோல்விக்கு கேட்ச் டிராப் செய்தது முக்கிய காரணமாக உள்ளது. பவர் பிளேயில் சிறப்பாக ஆடி இருந்தோம். அதேபோல கான்வே எப்போதும் டைமிங் வைத்து ஷாட்டை உருவாக்கும் பேட்ஸ்மேன். அதனால் ஜடேஜா அந்த நேரத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது” என்று கூறியுள்ளார்.