இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசன்னில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த வெற்றி தனக்கு தற்காலிகமான மகிழ்ச்சியில் மட்டுமே கொடுத்துள்ளதாக கம்பீர் கூறியுள்ளார்.

அதாவது சென்னை மற்றும் மும்பை அணிகளை விட இன்னும் 3 கோப்பைகளில் கொல்கத்தா அணி பின்  தங்கியுள்ளது. தற்போது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை தான் வென்றுள்ளோம். எனவே சென்னை மற்றும் மும்பை ‌ அணிகளை விட கொல்கத்தா அணி வெற்றிகரமான அணியாக மாற இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டி இருக்கிறது. மேலும் இதுதான் என்னுடைய அடுத்த லட்சியம் என்று கூறியுள்ளார்.