சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23ஆம் தேதி இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 7500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள் இந்த முறை 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. டிக்கெட் விலை 1700 ரூபாய் தொடங்கி 6000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.