ஐபிஎல் 2025 தொடரில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதலை முன்னிட்டு, சிஎஸ்கே அணியின் பயிற்சியில் நடந்த ஒரு நகைச்சுவையான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, பேட்டை கையில் எடுத்து தனது பழைய அணித் தோழரான தீபக் சஹாரை துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் பயிற்சி ஆட்டத்தின்போது நடந்ததாக கூறப்படுகிறது. தோனி – சஹார் இருவரும் அப்போது சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்த போது, சஹார் தோனியை கிண்டலடித்ததாகவும், அதற்குத் பதிலளிக்க தோனி நகைச்சுவையாக பேட் எடுத்துத் துரத்தினார் என்பதுதான் ரசிகர்கள் இடையே பரவும் தகவல். இது ஒரு மனமகிழ்வான நிமிடமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “தோனியின் இளம் மனசு என்றும் மாறவில்லை”, “தோனி இருக்கும் வரை சிஎஸ்கே சிரிப்பு நிறைந்தது தான்” என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அணியின் நட்புறவையும், சூழ்நிலையையும் சிறப்பாக இருக்கின்றதையும் இந்த நிமிடம் நிரூபிக்கிறது. தோனியின் காமெடி சீன்கள் கூட ரசிகர்களுக்கு ஒரு போட்டிக்கு முன்னோட்டமாக ஆனந்தத்தை வழங்குவதில் தவறவில்லை.