ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை மோதும் போடி சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ஐபிஎல் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் நள்ளிரவு ஒரு மணிக்கு அல்லது போட்டி முடிந்த 90 வது நிமிடத்தில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.