2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது rcb அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற போகின்றது என அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வெற்றி, தோல்வி தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு தோனி போட்ட ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதாவது எந்த அணி வெற்றி பெறுகிறது என்பது முக்கியமே இல்லை, நான் இங்கே பொழுதுபோக்கிற்காகவே இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.