இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22 ஆம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அணி முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் நேற்று இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரவு சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் வருகிற 28ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை www.chennaisuperkings.com என்ற இணையதள முகவரியில் புக் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு முன்பு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்