
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் 200 கோடி வசூலை எட்டி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தீவிரமாக கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவியுடன் திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில் இருவரும் கேக் ஊட்டி விடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் குடும்பத்துடன் சேர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணி இடையேயான போட்டியை நேரில் கண்டுகளித்து வருகிறார். அதன்படி நடிகர் அஜித் அவருடைய மனைவி ஷாலினி, மகள் மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் போட்டியை நேரில் கண்டு களிக்கிறார். இதேபோன்று இந்த போட்டியை காண நடிகர் சிவகார்த்திகேயனும் நேரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.