
அகமதாபாத்தில் மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது..
குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மைதான ஊழியர்கள் மைதானத்தை அவர்களால் மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான இறுதிப்போட்டி நடைபெறும் நேரத்தில் மழை கொட்டி தீர்த்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மறுபுறம் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
