
நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும் தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வு இரண்டு தாள்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் 1 மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருக்க விரும்புபவர்களுக்கு தாள் இரண்டு எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.