தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலை தளபதி விஜய் மற்றும் மானசி இணைந்து பாடியிருந்த நிலையில் தமன் இசையமைத்திருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், யூடியூபில் தொடர்ந்து பல சாதனைகளையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு அழகிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது ரஞ்சிதமே பாடல் ஒலிக்கிறது. அந்தப் பாடலைக் கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென எழுந்து உட்கார்ந்து தூக்க கலக்கத்தில் நடனம் ஆடுகிறது. இந்த வீடியோவை தமன்  பகிர்ந்து ஐயோ பாவம் சோ க்யூட் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.