தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று படமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 10 மொழிகளில் வெளியாகிறது. கங்குவா படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் கங்குவா படத்தில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கங்குவா பட குழுவினருக்கு நடிகர் சூர்யா மற்றும் நடிகர் பிரபாஸ் ஆகியோர் இணைந்து விருந்து வைத்துள்ளனர். இந்த விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் நிலையில் கங்குவா படத்தில் பிரபாஸ் நடிப்பதால்தான் சூர்யாவுடன் சேர்ந்து அவரும் படக்குழுவினருக்கு விருந்து வைத்துள்ளதாக ரசிகர்கள் பலர் கூறுகிறார்கள்.

https://twitter.com/GopiNikhil_SFc/status/1654683017317699584?s=20