ஆவின் நிறுவனம் சுமார் 200 வகையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து வருகின்றது. இதனை நுகர்வோருக்கு நியாயமான விலையிலும் விற்பனை செய்கின்றது. இந்த பால் விற்பனை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக திகழ்கிறது. கடந்த 2019-20ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்த நிலையில், தற்போது 2024-2025 வரை 30 லட்சம் லிட்டர் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வபோது புதுவகையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அந்நிறுவனம் அனைத்து நகர வெளிப்புற பகுதிகளில் பால் விற்பனையை அதிகரிக்க சுமார் 2 லிட்டர் பால் விற்பனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

வெளிப்புறப் பகுதியில் சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாத செலவுகளையும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. எனவே அந்நிறுவனம் 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9% இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட  கிரீம் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பாலை சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக கமிஷன் உடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதனுடைய சந்தையை கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பால் 450 மி.லி 25 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது விற்கப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் அளவையும் குறைக்கவில்லை என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.