
உத்திரபிரதேசம் இடவா பகுதியில் நகை கடை வைத்திருக்கும் முகேஷ் வர்மா என்பவர் தனது சகோதரர்களுடன் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒன்றாக வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், பவ்யா(22), காவியா(17) என்ற இரண்டு மகள்களும் அபிஷ்த்(12) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று முகேஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் சமைத்த உணவில் யாருக்கும் தெரியாமல் விஷம் கலந்து அதனை மனைவி மற்றும் மகள்கள், மகனுக்கு கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்ட ரேகா, பவ்யா, காவியா, அபிஷ்த் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை புகைப்படமாக எடுத்து முகேஷ் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு முகேஷ் மருதர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் மற்றும் ரயில்வே போலீசார் உடனடியாக ஓடி சென்று தண்டவாளத்தில் இருந்த முகேஷை மீட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இடவா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.