கனடாவில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கனடாவின் அதிபர்  ட்ரூடோ கனடாவில் வாழும் இந்திய குடிமக்களுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். கனடாவில் வாழும் இந்து மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய அதிபர் தனது இணைய பக்கத்தில் கூறியதாவது, நான் கடந்த சில மாதங்களில் மூன்று கோவில்களுக்கு சென்றுள்ளேன். அங்கு இந்து மக்கள் அதிர்ஷ்டத்திற்காக கயிறை கைகளில் பாசத்தோடு கட்டி விட்டனர். அதனை அன்போடு ஏற்றுக் கொண்ட நான் அதனை அவிழ்க்க போவதில்லை. இந்த தீபாவளி திருநாள் இருளை அழித்து ஒளியை அனைத்து இடங்களிலும் பிரகாசிக்கட்டும். கனடாவில் வாழும் இந்திய மக்கள் மிகவும் சிறந்தவர்கள் அவர்களுக்கு கனடா எப்பொழுதும் உறுதுணையாக நிற்கும் என தெரிவித்திருந்தார்.

கனடாவில் சீக்கிய மதப் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டது குறித்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஆன உறவு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியா தனது தூதரக அதிகாரிகளை இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வந்துள்ளது. மேலும் கனடா நாட்டின் வெளியுறவு அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்தியா மீது கனடா அரசு பல புகார்களை முன் வைத்துள்ளது. மேலும் இந்தியா கனடா மீது சைபர் கிரைம் நடத்தி வருகிறது எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளது இந்தியாவை கோபப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கனடா அதிபர் இந்திய இந்து மக்களுடன் தீபாவளியை பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.