தமிழகத்தில் 90s களின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் திரிஷா. தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்ட நடிகை. இவர் நடித்த சாமி, கில்லி திரைப்படங்கள் மூலம் பிரபலமாகினார். சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் மூலமாக அனைவரையும் கவர்ந்தார். இவர் அஜித்துடன் விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியாக வர உள்ள தக்ஃலைப் கதாநாயகியாக வருகிறார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடித்துவரும் திரிஷா தற்போது பாகுபலி நடிகரான பிரபாஸுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பிரபாஸ் தற்போது சந்திப் ரெட்டி இயக்கத்தில் ராஜா ஷாப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் நிறைவடைந்த பின் த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை திரிஷா பிரபாஸ் உடன் ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.