தமிழகத்தில் 75 ஆண்டுகாலமாக திமுக செயல் பட்டு வருகிறது. அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக கட்சியினை கலைஞர் கருணாநிதி கட்டி காத்தார். இந்நிலையில் திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா வருகிறது. இதனை முன்னிட்டு திமுகவினர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொடி பறக்க வேண்டும் என முதல்வர் முன்னதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது திமுக தெண்டர்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட பதிவில், திமுகவின் தொண்டர்கள் அனைவரின் உணர்வுகளுக்கும் நான் மதிப்பு கொடுக்கிறேன்.

75 ஆண்டு கால காலத்தில் தெற்கு தான் வடக்கிற்கு வழிகாட்டுவதாக பே”சப்படுகிறது. உறுப்பினர்கள் கூட்டத்தின் போது வெளிப்பட்ட தொண்டர்களின் ஆழ்மன கருத்தை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு நான் உணர்வளிக்கிறேன். திராவிட மாடல் என்பது இந்தியா முழுமையும் பின்பற்றும் கோட்பாடாக உள்ளது. மேலும் திமுகவின் பவள விழாவினை முன்னிட்டு தொண்டர்கள் அனைவரும் வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தன் கடிதத்தில் குறிப்பிட்டார். அதன்படி இந்த வெற்றி பயணம் தொடர்ந்திட ‌ வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி தொண்டர்கள் அனைவரும் படையென திரண்டிட வேண்டும் என தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.