நம் நாட்டில் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் மருத்துவ விடுப்பு, பெருகால விடுப்பு போன்ற சலுகைகள் கொடுக்கப்படுவதுண்டு. சில அலுவலகங்களில் சுற்றுலா செல்வதற்கு கூட விடுப்பு வழங்குவார்கள்.

இது எல்லாவற்றையும் தாண்டி தாய்லாந்தில் ஒரு நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இடையே பரபரப்பாக பேசும் விதமாக அமைந்துள்ளது.

ஒயிட்லைன் குரூப் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் அதிக வேலைப்பளு காரணமாக தன்னால் டேட்டிங் கூட செல்ல முடியவில்லை என சக ஊழியரிடம் மனம் விட்டு பேசி உள்ளார். இது அலுவலக அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து தான் இந்த முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு விடுப்பு வழங்கப்படுகிறது. டின்டர் லீவ் என்று வழங்கப்படும் இந்த சலுகையில் டின்டர் கோல்ட், டின்டர் பிளாட்டினம் என்று இரண்டு வகையாக பிரித்துள்ளனர்.

ஆனால் இந்த சலுகையானது 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் வேலையில் சேர்ந்து பயிற்சி கால பணிகளை முடித்தவர்களுக்கு தான் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி டேட்டிங் செல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்ட அந்த பெண் ஊழியர் தாராளமாக டேட்டிங் செல்லலாம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும்.