
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மடிவாளா காவல்துறை பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். இவர் தனது செல்போன் மூலம் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி நிகால் உசேன் என்ற நபருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். முதலில் பழக்கத்தில் இருந்த இருவரும் தங்களது மொபைல் எண்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். பின்னர் தொடர்ந்து இருவரும் செல்போன் மூலம் பேசி பழகி வந்துள்ளனர். அந்த இளம் பெண் நிகால் உசேன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி அவருடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் நிகால் உசேன் ஒரு நாள் அந்த இளம் பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பம் அடைந்த அந்தப் பெண்ணின் கருவையும் கலைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய நிகால் உசேன் மறுத்துள்ளார். இது குறித்து மடிவாளா காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் நிகால் உசேன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் நிகால் உசேன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய நிகால் உசேனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.