
மதுரையில் குடும்ப தகராறால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் ஏற்பட்டது. அவருடைய மனைவி ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக தனது கணவரான சேதுபதியுடன் கடும் தகராறு கொண்டிருந்தார். இவரது மனைவியின் தவறான நடத்தையால், குடும்பத்தில் ஏற்பட்ட மனச்சோர்வை சமாளிக்க முடியாத சேதுபதி, தனது மகள்களின் வாயில் விஷம் ஊற்றி, பின்னர் அவர்களின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த கொலைச் சம்பவம், குழந்தைகள் வீட்டில் இருந்த போது நடந்தது.
தனது இரண்டு குழந்தைகளும் இறந்த பிறகு. விஷம் குடித்தும் சாகாத நிலையில் சேதுபதி வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டிருக்கும் போது கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவர் மனைவி அதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்த ராஜேஸ்வரி சத்தம் போட்டு கூச்சலிட்டார். சேதுபதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.